காடுவெட்டி ஜெ.குருவின் 63வது பிறந்த நாள் கொண்டாட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் நகர பாமக சார்பில் முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ. குரு 63வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ படத்திற்கு நகர செயலாளர் தமிழ்மணி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பக்தவசலம் கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.ஆர். முருகன், முன்னாள் நகர செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயந்தி முருகன், ஒன்றிய செயலாளர்கள் கணபதி, அன்பழகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.