காட்பாடியில் 605 கிலோ ஹான்ஸ் குட்கா பான் மசாலா காவல்துறையினரால் பறிமுதல் !
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாநில எல்லைப்பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை, குடியாத்தம், பொன்னை சேர்க்காடு உள்ளிட்ட மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்பாடி டிஎஸ்பி சரவணன் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் மாநில எல்லைப் பகுதியான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர் கார் நிறுத்தாமல் சென்றதால் உடனடியாக காரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பள்ளிக்குப்பம் அருகே மடக்கி பிடித்தனர்.
போலீசாரை கண்டவுடன் கார் ஓட்டுனர் காரை விட்டு விட்டு தப்பி ஓடினார் இதனையடுத்து போலீசார் காரில் சோதனை மேற்கொண்ட பொழுது அதில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 3,80,000 மதிப்புள்ள 605 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான் மசாலா, உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது போலீசார் குட்கா பொருட்கள் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தில் வந்து தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமா படபாணியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று காட்பாடி போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.