காவலர்களுக்கு ஆற்றுப்படுத்தும் பயிற்சி !
திருச்சி மாவட்ட ஆயுதப்படை சமுதாயக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியினை மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இதில், மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக பேராசிரியர்.ம.கண்ணன் மற்றும் கு.குருபாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்
மத்திய மண்டலத்தில் உள்ள 60 காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிய கருத்துரைகள், ஆற்றுப்படுத்தும் கலைகள், முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.