குடிநீர் வீணாகப்போகிறது… கண்டுகொள்ள ஆள் இல்லை…

0

தமிழ்நாட்டின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், அதிக வறட்சி மற்றும் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டமாகும். இது வடக்கே புதுக்கோட்டை மாவட்டம், வடமேற்கு மற்றும் மேற்கில் சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள், தெற்கில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. இவை ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தது. இம்மாவட்டம் 4,23,344 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தனிச்சிறப்பு, சுமார் 265 கிலோமீட்டர் நீளம் கொண்ட மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது, இது மாநிலத்தின் மொத்த கடலோர எல்லை நீளத்தில் கிட்டத்தட்ட 1/4 பகுதியாகும்.

logo right

இராமநாதபுரம் மாவட்டம் 7 தாலுகாக்கள், 11 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 444 கிராம பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. நிர்வாக ஏற்பாடுகளின் படி நிலையைப் பொறுத்தவரை, இந்த மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 23,32 ஊரக குடியிருப்புகள் உள்ளன. அம்மாவட்டத்தின் சராசரி மழையளவு 827 மி.மீ. ஆனால் மழையின் அளவு சீரற்றது மட்டுமல்லாமல், ஒழுங்கற்றதாகவும் இருக்கிறது. இராமநாதபுரத்தின் மண் களிமண், கடற்கரை வண்டல், வண்டல், மணல் களிமண் மற்றும் கறுப்பு பருத்தி மண் என வகைப்படுத்தலாம். இராமநாதபுரம் மாவட்டம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய ஒரு முக்கிய இடமாக திகழ்வதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் பொருட்டு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றின் குழாய்கள் பழைய காவிரி ஆற்றில் பாலம் வழியாக செல்கிறது அதேபோல மாநகராட்சியில் இருந்து ஸ்ரீரங்கம் பகுதிக்கும் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது, இந்நிலையில் இன்று காலை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிக்கொண்டிருக்கிறது, மழைத்துளி உயிர்துளி என்பதும் குடிநீர் உயிர்நீர் என்பதெல்லாம் மக்களுக்கு மட்டும்தான் போல.

Leave A Reply

Your email address will not be published.