குற்றவாளிகளுக்கு ஜெயலலிதா தண்டனை தருவார் !
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று, ஜெயலலிதா தெய்வமாக இருந்து, அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பார் என்று சசிகலா தெரிவித்தார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக நேற்று சசிகலா கோத்தகிரியில் உள்ள கொடநாடு பங்களாவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது…ஜெயலலிதா இல்லாமல், முதன்முறையாகநான் இங்கே வருகிறேன். ஜெயலலிதா நினைவாகவே நான் இங்கு வந்துள்ளேன். எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களை பார்ப்பதற்காக வந்துள்ளேன். இப்படியொரு சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
எங்கள் தோட்டத்தில் சிறுவயதில் இருந்தே காவலாளியாக வேலை பார்த்தவர் இந்த இடத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண் டனை பெற்றுகொடுப்பார். இந்த நம்பிக்கை எனக்குள்ளது. இங்கு ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதற்காக பூஜை செய்வதற்காக வந்துள்ளேன்.
அதிமுகவை ஒன்று படுத்துவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டே இருக்கிறேன். நிச்சயம் நல்லபடியாக முடியும். ஒருவருக்கு ஒருவர் விட் டுக் கொடுப்பதே அரசியலுக்கு நல்லது. இந்த சூழல் நிச்சயம் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.