குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் !
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொண்டுவரும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் உள்ள செய்யார், வந்தவாசி, ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் 12 தாலுகாக்களில் இருந்து குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வரக்கூடிய மக்களுக்கு கடந்த வாரம் அரசு ஊழியர்களை கொண்டு மனுக்களை எழுதிதரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் இந்த வாரம் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
மேலும் உடல் ஊனமுற்றோர் தன்னுடைய இருக்கைக்கு வர இயலாது என்பதால் அவரே நேரடியாக முதலில் அவர்களிடன் சென்று கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
தமிழகத்தின் முன்மாதிரி மாவட்ட ஆட்சியராக திகழ்ந்து வருகிறார் இதனால் மக்கள் மனதார பாரட்டிச்செல்கின்றனர்.