குஷ்பு மாமியார் நெகிழ்ச்சி… ஏன் ?

0

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை இவருக்கு 92 வயதாகிறது, ராமபக்தையான இவர், சென்னையில் குஷ்புவுடன் வசித்து வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதற்காக பிரதமர் மோடியை சந்தித்து பாராட்ட வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று குஷ்புவிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் குருவாயூரில் நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்கு அவரைச் சந்தித்த குஷ்பு, தனது மாமியாரின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

logo right

நேற்று முன்தினம் பிரதமர் மோடி, சென்னை வந்ததால் குஷ்பு முன்கூட்டியே பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பி அனுமதி கேட்டுள்ளார். அதன்படி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா நடந்த நேரு விளையாட்டரங்கில் சந்திக்க அனுமதி கிடைத்தது. விழா முடிந்த பிறகு அங்கிருந்த பசுமை அறையில் காத்திருந்த தெய்வானையம்மாள் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மோடியைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்தவர் அவரது கைகளை பிடித்தபடி, ராமர் கோயில் கட்டிய உங்களை கடவுள் மாதிரி பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதைக்கேட்ட மோடி, பெரியவர்களான நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் சாதாரண மனிதன். ராமர் கோயில் கட்ட கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன் என்றிருக்கிறார்.

இதைக் கேட்ட தெய்வானை, இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் என்று வாழ்த்தியுள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தாராம். அப்போது தங்கள் குலதெய்வகோயில் குங்குமத்தை கையில் வைத் திருந்த தெய்வானை, இதை வாங்குவீர்களா? என்று பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார். அதைக் கேட்ட பிரதமர், உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் எனக்குத் தேவை என்று கூறி, அவரையே தனது நெற்றியில் வைக்கும்படி கேட்டுள்ளார். உடனே அவர் மகிழ்ச்சியுடன், பிரதமர் மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து ஆசி வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.