கூட்டணியை முடிவு செய்யுமா படத்திறப்பு விழா…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி காலமானார். அவர் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்நினைவிடத்தில் தினமும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது என்றும் இந்த நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை அனைத்துக்கட்சியினரும் ஒவ்வொரு கோணத்தில் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்திறப்பு விழாவை வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேமுதிகவும் தயாராகி வருவதாக அவர்கள் கட்சியினர் பேச ஆரம்பித்து விட்டார்கள் அன்றைய தினம் படத்திறப்பு விழாவிற்கு வருகை புரிபவர்கள் யார் என்பதை வைத்து கூட்டணிக்கணக்கை தேமுதிக தொடங்கும் என்கிறார்கள் சென்னை கோயம்பேடு வட்டாரத்தில்