கெட்டுப்போன உணவு நேற்று துப்புரவு பணியாளர்கள் இன்று காவலர்கள் !!
மோடி தமிழகத்தைவிட்டு போகும்வரை எத்தனை சர்ச்சைகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் சந்திக்குமோ தெரியவில்லை நேற்று துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வாகனத்திலேயே உணவை கொண்டு வந்து வழங்கிய சர்ச்சையே இன்னும் முடிந்தபாடில்லை இந்நிலையில் நேற்று முதல் காவல் பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்ற கூக்குரல் எழுந்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்யவரவுள்ள நிலையில் அதற்காக 3500 க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவு சரியில்லை என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வந்த பொழுது கெட்டுப்போன உணவை போலீசாருக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு இருந்தது.
மனிதன் கஷ்டப்பட்டு காசு சம்பாதிப்பதே கால் வயிற்றுக்காகத்தான் ஆனால் இப்படி கெட்டுப்போன உணவை வழங்கினால் வயிறு என்னவாகும் கடைகள் திறந்து இருந்தாலாவது நாங்கள் போய் சாப்பிட்டு வந்துடுவோம் ஆனால் இப்படி படுத்துறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்றார் பணியில் இருந்த காவலர் ஒருவர் சரிதான் புளியோதரையை போட்டிருந்தாலே மூன்று நாட்கள் கெட்டுப்போகாதே யார் சார் இவங்ககிட்ட உப்புமா கேட்டது இது ரொம்ப தப்புமா என ஆதங்கத்தை கொட்டினார்.