கொடுமை : பாவப்பட்ட இருளர் சமுதாயத்தினர் …

0

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா, மேலச்சேரியில் மதுரா இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ரேணுகா, அவரது கணவர் பார்த்திபன், ரேணுகாவின் தந்தை நாகப்பன் இவர்களுடன் அவரது உறவினரான சித்தி சித்தப்பா மேலும் ஒருவர் உள்ளிட்ட சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் செங்கற்கள் தயாரிக்கும் பணிக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆர் சி சேம்பரில் நாள் ஒன்றுக்கு கணவன் மனைவிக்கு 800 ரூபாய் சம்பளம் வீதம் வேலைக்கு வந்துள்ளனர்.

ஐந்து மாதங்களாக வேலை செய்து வந்த இவர்கள் அவர்களது உறவினர்களான சித்தி ,சித்தப்பா உறவினருக்கு உடல் நலக் கோளாறு காரணமாக ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது . ஊருக்குச் சென்ற அவர்கள் ஒரு வாரமாக செங்கல் சூளைக்கு வேலைக்கு திரும்ப வரவில்லை என்றும் உடனடியாக அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் உங்களை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம் என்றும் கூறி செங்கல் சூலை உரிமையாளர் மிரட்டியுள்ளார்.

logo right

உடன் பணியாற்றும் அஜித் ,சாரதி என்பவர்களை வைத்து கடுமையாக தாக்கியதில் ரேணுகா முகத்தில் கடுமையாக தாக்கியதில் கண் திறக்கமுடியாமலும் , அவரது கணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர். இதனை அடுத்து இந்த தகவல் குறித்து வந்த கொத்தடிமைகள் மீட்பு குழு சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மூலமாக இவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயபடுத்திவிட்டு நல்லவர்கள் போல் பழனி அரசு மருத்துவ மனைக்கு வந்த உரிமையாளர் விரைவில் பணிக்கு வருமாறு இல்லையென்றால் பன்னை வீட்டில் வைத்து மீண்டும் சித்தரவதை செய்வோம் என்று தைரியமாக மிரட்டியுள்ளனர். இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்த இருளர் இன கணவன் மனைவியை பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதை செய்வோம் என்று கூறி கடுமையான தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave A Reply

Your email address will not be published.