கொடைக்கானல் : ஏரி சாலையில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் பரபரப்பு !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது . இங்கு பல்வேறு வனவிலங்குகளும் உயிரினங்களும் வசித்து வருகிறது . இங்கு காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை ,உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகர் பகுதியில் உலா வருவது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ள ஏரி சாலை அருகே தனியார் இடத்தில் சுமார் 20 இருக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தது. புகுந்த காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு திரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகளை கண்காணித்து வனப்பகுதியிலே விரட்ட வேண்டும் என கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது அத்தோடு ஒருவித அச்சமும் நிலவி வருகிறது.