கொடைக்கானல் : சிங்கம் சிங்கிளாத்தான் வரும் !

0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வன விலங்குகளின் வருகையும் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாம்பார்புரம் புனித சலேத் அன்னை ஆலயம் அருகே குடியிருப்புகள் அமைந்துள்ளது.

இப்பகுதியில் நேற்று இரவு ஒற்றை காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது . அங்கு அமைந்துள்ள குடியிருப்பின் மேல் கூரையின் மீது ஓடிய காட்டெருமை மேற்கூரையை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது .இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கூச்சலிட்டனர். வீட்டில் புகுந்த காட்டெருமை வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளது.

logo right

வீட்டில் புகுந்த காட்டெருமை வீட்டை விட்டு வெளியேறி ஓடியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

எனவே குடியிருப்பு மற்றும் நகர் பகுதிக்குள் புகும் காட்டெருமைக் கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.