கோடை கால விடுமுறையை கொண்டாட கவுண்டமணி களத்தில் இறங்குகிறார் !

0

கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் ’ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது. கவுண்டமணி அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி முடித்திருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது.கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..’மொட்டை ராஜேந்திரன்- ரவிமெளரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்துள்ளனர்.

logo right

இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & பிந்து மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

கவுண்டமணி மனைவியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்..இது தவிர- சிங்கமுத்து..தாரணி..ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன்-(ஹட்ச் டாக்) சென்றாயன்..கூல் சுரேஷ்..சதீஷ் மோகன்..காதல் சுகுமார் சிசர் மனோகர் ஆதேஷ் பாலா..மங்கி ரவி..பெஞ்சமின்.. கொட்டாச்சி..விஜய கணேஷ்..”லொள்ளு” பழனியப்பன் நளினி சாமிநாதன் மணவை பொன் மாணிக்கம்..பத்மநாபன்..குணாஜி.. காஞ்சி புரம் பாய், கண்ணதாசன்..மதுரநாயகம் ‘போண்டா’ மணி..சின் ராசு அனுமோகன்.. ரேவதி, மணிமேகலை, RDS சுதாகர்..மற்றும் மதுரை நண்பேண்டா அட்மின் டெம்பிள் சிட்டி குமார் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பங்கேற்கிறார். கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.