’சங்கி’ என்பது கெட்ட வார்த்தை இல்லை ரஜினிகாந்த் !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உரு வாகியுள்ள ‘லால்சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடந்தது,இந்நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, என் அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போதும் சொல்கிறேன் அப்பா சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். அவர் மனித நேயவாதி’ என்று கூறினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நேற்று காலை சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் விஜயவாடா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசும் போது, ’சினிமா படப்பிடிப்புக்காக இப்போது விஜயவாடாவுக்கு சென்று, அங்கிருந்து ஐதராபாத் போகிறேன்.’உங்கள் மகள் ஐஸ்வர்யா, என் அப்பா சங்கி அல்ல என்று கூறியிருக்கிறாரே ? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்குமே கூறப்படவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி. எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள் ? என்பது எனது மகளின் பார்வை. அப்பா சங்கி அல்ல என்பது அவரு டைய கருத்து’ என்றார்.
லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த படத்தை நீங்கள் பாருங்கள். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக அது இருக்கும் என்றார். அப்போது அவரிடம்,தொடர்ந்து,லால் சலாம் படம் நன்றாக ஓடுவதற்காக, உங்கள் மகள் இப்படி பேசுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, ரஜினி, ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ என பதில் அளித்தார்.