சசிகலா புது வீடு அரசியலில் புத்துயிர் பெருமா ?

0

சசிகலா சென்னை போயஸ் கார்டனில் 3 மாடிகளுடன் கூடிய பிரம்மாண்ட பங்களாவை கட்டியுள்ளார். இது அப்படியே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இதன் கிரகப்பிரவேசம் நேற்று கணபதி ஹோமம், கோ பூஜை என விமர்சையாக நடந்தது. இதில் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக வேதா இல்லத்தின் வாயிலில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகே எதிரிலுள்ள தனது புதிய இல்லத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சசிகலா.

1980களில் தொடங்கி ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் வசித்து வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை அப்போதைய அதிமுக அரசு அரசுடமையாக்கியது.

இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் உரிமை கோரினர்,

logo right

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு எதிரே அவர் புதிய பங்களா கட்டும் பணியை துவங்கினார். ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்களை அவர் சந்தித்தார். புதிதாக கட்டப்பட்டு வந்த இல்லத்துக்கு கூட அமலாக்கத்துறை சீல் வைத்திருந்தது. பல்வேறு சிக்கல்களுக்கு கடந்து தன் புதிய வீட்டை கட்டி நேற்று கிரகப்பிரவேசமும் நடத்திவிட்டார்.

இதனால் சசிகலா தான் ஏற்கனவே வசித்து வந்த உறவினர் வீட்டை காலி செய்து போயஸ்கார்டனுக்கே வருவார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அவர் தொடர்ந்து அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அவ்வப்போது தனது ஆதரவாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பிரிந்து இருக்கும் அதிமுகவை இணைப்பதே தனது நோக்கம் என்றும் கூறி வருகிறார். இப்போது போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே குடியேறும் நிலையில்,

தனது நோக்கத்தை நிறைவேற்ற எப்படி காய் நகர்த் தப்போகிறார், நாடாளுமன்ற தேர்தலின் போது அவரது பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த அதிகாரமாக சசிகலா இல்லம் மாறுமா அல்லது ரஜினிகாந்த் போல அரசியல் துறவறம் மேற்கொள்வாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

Leave A Reply

Your email address will not be published.