சட்லஜ் நதியில் விழுந்த சைதை துரைசாமி மகன் கார் !

0

சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது நேற்று மாலை சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo right

ஆற்றில் விழுந்த காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வைல்ட்டு லைப் போட்டோக்காரர் என்றும் அஜித்துக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.