சபரிமலை வருவாய் ரூபாய் 357.47 கோடி !!
சபரிமலையில் 2023 24ம் ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு விழா முடிந்து நேற்று சன்னிதானம் நடையடைக்கப்பட்டது. இந்தாண்டு கோயிலில் கிடைத்த மொத்த வருவாய் 357 கோடியே 47 லட்சம் ரூபாய் என்று தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். எப்போதும் இல்லாதவ கையில் இந்த முறை சபரி மலைக்கு சென்ற பக்தர்கள் எருமேலி முதலே பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. நிலக்கல் பார்க்கிங் பிரச்சனை தொடங்கி, பம்பாவில் மணிக்கணக் கில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டு, மலையேறும் வழியிலும் ஆங்காங்கே மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தப்பட்டனர் . பற்றாக்குறை அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு என பல இன்னல்களை கடந்து 10 முதல் 15 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மகரஜோதி தினத்துக்கு 3 நாட்கள் முன்னதாகவே பக்தர்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்து ஒருவழியாக விழாக் காலத்தை நடத்தி முடித்தது கேரளாவின் மார்க்சிஸ்ட் அரசும், தேவசம் போர்டும். அதே நேரத்தில், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கோயிலுக்கு கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாகவே வருவாயை கொடுத்திருக்கிறார்கள் பகதர்கள். கடந்த ஆண்டு வருவாயை விட 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் 357 கோடியே 47 லட்சம் ரூபாய் தேவ சம்போர்டுக்கு கிடைத்தது. அரவணா பாயசம் விற்பனையில் 146 கோடியே 99 லட்சம் ரூபாயும், அப்பம் விற்பனையாக 17 கோடியே 64 லட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை இன்னும் முழுமையாக எண்ணி முடிக்கவில்லை. இந்தத் தொகை 10 கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் பக் தர்கள் வருகையும் 50 லட்சத்தை கடந்தது. கடந்த ஆண்டு 44 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களிலாவது பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்துத்தரவேண்டியது அரசின் கடமை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.