சபாஷ் : அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு மனுக்கள் எழுதி தர வேண்டும் ! ஆட்சியர் அதிரடி !!

0

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ஒவ்வொரு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியாக அமர்ந்து மனுக்கள் எழுதுபவர்களிடம் பணம் கொடுத்து தங்களது குறைகளை மனுவாக எழுதி வருகின்றனர்.

logo right

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தில் ஒரு பெண் மனு அளிக்க வந்தார். அப்போது மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் இந்த மனு எழுதுவதற்கு எவ்வளவு பணம் தந்தீர்கள் என்று கேட்டார், அதற்கு ஐம்பது ரூபாய் கொடுத்து மனு எழுதி வந்ததாக அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியை அழைத்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை துறை உள்ளதோ அந்த துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தலா இரண்டு நபர்கள் வாராந்தோறும் திங்கட்கிழமையன்று வெளியில் அமர்ந்து மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதித் தர வேண்டும் என உத்தரவிட்டார்.

இது மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக மனு அளிக்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரமாக கால்கடுக்க நின்றிருந்த நிலையை காணப்பட்டது. ஆனால் புதிதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பாஸ்கர பாண்டியன் வாரந்தோறும் 500 நாற்காலிகளை வரவழைத்து பொதுமக்களை அமர வைத்து மனுக்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கும் நாற்காலிகள் அமைத்து பொதுமக்களை அமர வைத்து மனுக்களை பெறும் நிகழும் நடந்தது. இந்த நிகழ்வு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.