சபாஷ் கொலைக்குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது …
கடந்த 23.01.2024ந்தேதியன்று இரவு ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, திருவானைக்கோவில் சன்னதிவீதி, நான்கு கால் மண்டபம் அருகே உள்ள தீட்ஷதர் தோப்பு மண்டபம் அருகில், மண்ணச்சநல்லூரை சேர்ந்த மாதவன் (எ)மண்ணச்சநல்லூர் மாதவனை அடையாளம் தெரியாத நபர்கள் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
பிரேதத்தை கைப்பற்றி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குற்ற எண்.98/2024 u/s 302 IPC-ன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.இந்நிலையில் கொலைக்குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இக்கொலை நடந்த சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி.,அவர்கள் எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. துரிதமாக மேற்க்கொள்ளபட்ட விசாரணையில், வழக்கில் தொடர்புடைய 1.சங்கர் 2.மணிகண்டன் ஆகிய இருவரும் கொள்ளிடம் இடிந்த பழைய பாலம் அருகில் பதுங்கி இருப்பது தெரியவரவே தனிப்படையினர் அவர்களைப்பிடித்து விசாரணை செய்தபோது, மேற்படி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதின்பேரில், மேற்கண்ட எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வழககினை துரிதமாக விசாரணை செய்து, எதிரிகள் மீது வழக்கு பதிவாகி 24 மணி நேரத்திற்குள் விரைந்து எதிரிகளை கைது செய்த தனிப்படையினர் மற்றும் காவல் துறையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் பாரட்டினார்கள்.
மாதவனை கொலை செய்ததில் ஒருவர் அவர் மனைவியின் சகோதரர் அவரின் பெயர்தான் சங்கர் மற்றொருவர் மணி இவர் பிரபல ரவுடியாக வலம் வந்த மதியின் மகன் அதாவது சித்தப்பாவுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளான், காரணம் ஜஸ்ட் கஞ்சா போதை ஏரியாவில் நாமும் தாதாவாக வலம் வரவேண்டும் என்ற நினைப்பில் இந்த படுகொலையை செய்ததாக காவல்துறை வசம் சிக்கிய மணிகண்டன் தெரிவித்துள்ளான்.
இனி அவன் தாதா ஆக முடியாது ஏனென்றால் தாத்தா ஆகிய பின்னர்தான் சிறையில் இருந்து வெளியே வர முடியும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது போதைக்காக பாதை மாறும் இளைஞர்கள் அதிகரித்து விட்டார்கள் என்பது அவர்கள் புகழுக்காகவும் போதைக்காகவும் எதையும் செய்வார்கள் என்பதும்…இத்தனை ஆண்டுகாலங்களில் திருச்சியில் எத்தனையோ பிரபல ரவுடிகள் வலம் வந்திருந்தாலும் இன்றுவரை இப்படிப்பட்ட கொலை திருவானைக்கோவில் நடந்தது இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.