சமயபுரம் மாரியம்மன் கோவில் தீ விபத்து…

0

சக்தி ஸ்தலங்களில் உலகப்பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று முதல் உலக நன்மைக்காகவும் பக்தர்களின் நலனுக்காகவும் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 28 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார்.

இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களை கொண்டு அம்மனுக்கு சாற்றி வழிபடுவார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 5 40 மணியளவில் உற்சவர் அம்மனுக்கு கோவில் குருக்கள் குருவாயூரப்பன், மற்றும் நாகநாதன் பூஜை செய்து தீபாதாரணை காட்டும் போது உற்சவர் அம்மனுக்கு மேலே அமைக்கப்பட்டு இருந்த வெட்டிவேர் பந்தலில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது.

logo right

குருவாயூரப்பன், நாகநாதன் 2 குருக்களும் தீயை அணைக்கும் பொழுது இருவரது கை,தலை,உடம்பில் தீக்காயம் ஏற்பட்டது. இதில் இரண்டு அர்ச்சகர்களும் சமயபுரம் அடுத்து இருங்களூர் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உற்சவர் அம்மனுக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து ஏற்பட்டதால் உற்சவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகளான வஸ்திர ஹோமம் , வாஸ்து சாந்தி ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் செய்தனர். சக்தி ஸ்தலங்களில் உலகப்பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவர் அம்மனுக்கு பூஜை செய்து தீபாரதனை காட்டும் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.