சமூக வலைத்தளத்தில் சதிராடினாரா செளதாமணி ?
சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்டு திராவிட மாடல் ஆட்சியில் மதுப்புழக்கம் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக அவதூறு கருத்து பரப்பிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது திருச்சி திமுக மத்திய மாவட்ட ஐடி பிரிவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் சவுதாமணி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் செளதாமணி.
எக்ஸ் தளத்தில் குழந்தைகள் மது குடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்த பாஜக நிர்வாகி சவுதாமணி மீது ஆறு (504,505,153,66E IT,74,77) பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னயில் இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஐ.டி விங் புகாரால் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.