சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம்: பிரதமர் மோடி புகழாரம்..

0

கேலோ இந்தியா ஜோதியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கின. விளையாட்டுகளில் பல சாம்பியன்களை உருவாக்கிய தமிழகம், விஸ்வநாதன் ஆனந்த், ப்ரக்யா, மாரியப்பன் ஆகிய சாம்பியன்களை உருவாக்கிய பூமியாக திகழ்வதாக பிரதமர் மோடி பேசினார்.

இதில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பதே நோக்கம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உழைத்து வருகிறோம். இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர்த்துவதே தமிழக அரசின் குறிக்கோள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க, அரசு பதவிறே்றப்பின் செஸ் ஒலிம்பியாட் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்தியுள்ளோம். சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுத்துறைக்கு உண்டு என்றார். விளையாட்டையும், வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நமது இலக்கு. இந்த விழாவைப் பொறுப்பேற்று நடத்தும் அமைச்சர் உதயநிதியைப் பாராடுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

logo right

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது என்று கூறினார். 6 வது கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது, விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்றார் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்தியாவில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் முயற்சி செய்து வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.