சிறந்த மாடுபிடி வீரருக்கு வீட்டுமனை பரிசு !

0

திருச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். சூரியூரில் நடைபெறுவதுதான், திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும் இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். அப்படி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் பெரிய குளத்தில் நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளாக விழா மேடை மற்றும் தடுப்பு வேலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாடுகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள், இந்தாண்டு வெற்றி பெறும் சிறந்த வீரருக்கு வீட்டுமனை பரிசாக வழங்கப்படும் என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.