சிறப்புத்தோற்றம்னு சொல்லி ஏமாத்திபுட்டாங்களே !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது, ஆனால் ரஜினிகாந்திற்கு இப்படி ஒரு அழுத்தமான பாத்திரம் என்று சொல்லவேயில்லை, ஆடியோ வெளியீட்டு விழாவில் எங்கப்பா சங்கியல்ல எனக்கூறியதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது.
இந்நிலையில் நேற்று திரைப்படம் வெளியாக அத்தனை அதகளம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் குடும்பத்துடன் பார்க்கலாம் என விமர்சனங்கள் ஒருபுறம் வைரலாகிக்கொண்டிருக்க, திரைப்படம் நேற்று வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கின் முன் ரஜினி ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து கொண்டாடினர். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படம் பொருந்திய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர் அதில் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திருச்சியில் திரும்பிய பக்கம் எல்லாம் போஸ்டர் அதில் அட்டகாசம் ‘மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே’ என இடம் பெற்றிருக்கும் வாசகம் படையப்பா படத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னால் ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனத்தைக்கூறி வியந்து தள்ளுகின்றனர்
‘வயசானாலும் உன் Style-ம் அழகும் உன்ன விட்டு இன்னும் போகல’ ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன் எப்படி இருந்தாலும் கொண்டாடித்தான் தீர்ப்பார்கள் அவரது ரசிகர்கள். இதுக்கே இப்படி என்றால் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் பொழுது கேட்கவும் வேண்டுமா ?