சீனாவிற்கு செக்… இந்திய நிறுவனம் வென்றது !
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே சோலார் மற்றும் காற்றாலை அமைப்பதற்கான டெண்டரை சமீபத்தில் சீனா நிறுவனம் வென்றது. இருப்பினும் அண்டை நாடான இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சீனாவுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்துவிட்டு, அதை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு அளித்துள்ளது.
ஆசிய மேம்பாட்டு வங்கி கடனுதவியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், சீனா கம்பெனிக்கு இந்தியா தெரிவித்த எதிர்ப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இப்பணிகளை இந்திய காற்றாலை நிறுவனத்துக்கு இலங்கை வழங்கியுள்ளது.
இந்த திட்டங்களுக்கு இந்திய அரசு 1.1 கோடி டாலர் மானியம் அளிக்கவுள்ளதால் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படுகிறது என்று இலங்கை மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த யூ-சோலார் என்ற நிறுவனம் இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளும். இதன்மூலம் 2,230 கிலோவாட் மின்உற்பத்தி சாத்தியமாகும் என அநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அடுத்தது சீனாவின் முயற்சிக்கு செக் வைத்துக்கொண்டே வருகிறது இந்தியா !