சீமானை சீண்டிய விஜயபிரபாகரன் கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே சொந்தம் !
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னுத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுத்தார்.
திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது அண்ணன் சீமான் அவர்கள் கொட்டுமுரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்ற போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது என்று பேசினார்.
மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் பலத்த கைத்தட்டலுக்கு இடையே கலகலப்பாக்கினார்.