செங்கம் : சீறிப்பாய்ந்த காளைகள் களைகட்டிய திருவிழா !

0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் வெகு விமர்சையாக எருது விடும் விழா நடைபெற்றது. ஐந்தாம் ஆண்டாக நடத்தப்படும் எருது விடும் விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று இலக்கை துரத்திய அதிவேகமாக ஓடின.

பரமனந்தல் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட காளை கலந்து கொண்டு 100 மீட்டர் தூரம் கொண்ட இலக்கை குறைந்த வினாடியில் கடக்க காளைகள் துள்ளி குதித்து அதிவேகமாக ஓடியது.

logo right

துள்ளி வரும் காளைகளை அடக்க இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் இரண்டு சுற்றுகளாக நடைபெறும் எருது விடும் விழாவில் 100 மீட்டர் இலக்கை குறைந்த வினாடியில் அடையும் காளைகளின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 50, ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 40 , ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாய் என போட்டியில் வெற்றி பெரும் 51 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,.

இந்த எருது விடும் விழாவை காண செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கண்டு களித்து ரசித்து மகிழ்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.