சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு வரம்பு தெரியுமா ?

0

தற்பொழுதைய நிலையில் எல்லோருக்கும் வங்கியில் குறைந்தபட்சம் ஒரு சேமிப்பு கணக்கு உள்ளது. உங்கள் சேமிப்புக் கணக்கை UPI உடன் இணைப்பதன் மூலம் இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்பது நீங்கள் அறிந்ததே.

உங்கள் சேமிப்பை உங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். இதில், டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வங்கியில் இருந்து வட்டியும் கிடைக்கும், இது உங்கள் வருமானத்தையும் அதிகரிக்க வழிசெய்கிறது. ஆனால் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு அதிகபட்சமாக டெபாசிட் செய்ய முடியும் தெரியுமா ?

சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை ஆனால் வரம்புக்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரி விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் ?

logo right

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஐடிஆர் வரம்புக்குள் வரும் அந்தத் தொகையை மட்டும் அதில் வைத்திருப்பதில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதிக பணம் வைத்திருந்தால், கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​உங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, அதற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். உங்கள் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகையிலிருந்து நீங்கள் பெறும் வட்டி உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். உங்கள் ஆண்டு வருமானம் ரூபாய் 10 லட்சமாக இருந்தால், அதற்கு வங்கியில் இருந்து ரூ.10,000 வட்டி கிடைத்தால், வருமான வரி விதிகளின்படி உங்கள் மொத்த வருமானம் ரூ.10,10,000 ஆகக் கருதப்படும்.

அதிக பணம் வைத்திருந்தால் என்ன நடக்கும் ?

சேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்பதற்கு வரம்பு இல்லை. ஆனால் ஒரு நிதியாண்டில் உங்கள் கணக்கில் ரூபாய் 10 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், இது குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இது வருமான வரி வரம்புக்கு உட்பட்டது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால், வரி ஏய்ப்புக்காக வருமான வரித் துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.