சோகம் : ஜல்லிக்கட்டுக்காளை உயிரிழப்பு மக்கள் வாட்டம் !!

0

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் புனிதவனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல்,மதுரை, திருச்சி, தேனி, சிவகங்கை,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் களம் இறக்குவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

logo right

மேலும் வாடி வாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போட்டியில் சிறப்பாக சீறிவரும் காளைகள் மற்றும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழுவின் சார்பாக பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன,. இதற்கிடையே வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்ட மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யுர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவருடைய காளை வெற்றி பெற்று பின்னர் வாடி வாசலில் இருந்து வெளியே சென்ற பொழுது மாட்டின் உரிமையாளர்கள் கயிறு வீசி மாட்டை பிடிக்க முயற்சித்துள்ளனர்.

திண்டுக்கல் தோட்டனுத்து அருகே பிடிக்கப்பட்டு பின்னர் மூக்கு கயிறு கோர்க்கும் போது எதிர்பாராத விதமாக காளை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. காளையை அடக்கம் செய்வதற்காக ஆட்டோ மூலம் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்திற்கு மாட்டின் உரிமையாளர்கள் எடுத்துச் சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.