சோலார் பேனல் அமைக்க மானியம் !
திருச்சி ஆர்எம்எஸ், டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப் பாளர் கூறியிருப்பதாவது… மத்திய அரசின் சூரிய வீடு என்ற திட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க விருப்பம் உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. வீடுகளில் சோலார் பேனல் அமைத்து மாதம் தோறும் 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைவோர் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன் உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் வாய்ப்பும் உள்ளது. சோலார் பேனல் அமைப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் மின் நுகர் வோர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் தேவையான ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள தபால் காரரை அல்லது அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.