ஜகா வாங்கிய விவேக் ராமசாமி..
இந்திய – அமெரிக்கர் மற்றும் தொழிலதிபரான விவேக் ராம சாமி அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித் துள்ளார். குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான பிரைமரி தேர்தலில் விவேக் போட்டியிட்டார். ஐயோவா மாகாணத்தில் நடந்த பிரைமரி தேர்தலில் மக்கள் திரளாக வந்து ஒட்டு போட்டனர். இதில் டிரம்ப் அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் புளோரிடா கவர்னர் டி-சான்டிஸ், 3வது இடத்தில் நிக்கி ஹேலி, 4வது இடத்தில் விவேக்ராமசாமி உள்ளனர். விவேக் ராமசாமி, பிரைமரி தேர்தலில் வெற்றி பெறாவிட் டாலும் அவரை துணை அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில், வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக விவேக் தந்து எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ‘தங்களுக்கு யார் அதிபராக வர வேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் தெளிவாகவும் உரத்த குரலிலும் தெரிவித்துள்ளனர். எனது பிரசாரத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு விலகுகிறேன். டிரம்புக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அவர் அமெரிக்க அதிபர் ஆவதற்கு என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். அமெரிக்கா முதலில்’ என்ற தேசப்பற்று உள்ளவர், வெள்ளை மாளிகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியவம்சாவழியைச்சேர்ந்தவர் அதிபர் ஆவார் எனக் கனவு பலிக்காமல் போனது.