ஜனவரி 22 இந்தியா முழுவதும் அரை நாள் மட்டுமே வேலை !
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை அரை நாள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்தா 22ம் தேதி கொண்டாடப்படுகிறது இதனையொட்டி. இந்தியா முழுவதும் 22 ஜனவரி 2024. பணியாளர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அன்று மதியம் 02. 30 மணி வரை அரை நாள் மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோவிலின் கருவறையில் உள்ள புதிய ராம் லல்லா சிலையின் ‘பிரான் பிரதிஷ்டா’ விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார். மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பிடிஐயிடம் தொடர்பு கொண்டபோது, அதிகமான மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இது தொடர்பாக நாடு முழுவதும் பொதுமக்களிடையே பெரும் கோரிக்கை எழுந்தது. மக்களின் அதீத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஜனவரி 22ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை அரை நாள் மூடுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வடமாநிலங்கள் விடுமுறையை தொடர்ந்து அறிவித்து வரும் வேளையில் இன்று புதுச்சேரி அரசும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.