ஜெயம் கிட்டுமா ஜெயம் ரவியின் சைரனுக்கு !!
தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது…ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் எங்கள் அன்பு ஜெயம் ரவி இந்தப்படத்திலும் அசத்தியுள்ளார். என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். n ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசியதாவது…மாநகரம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையில் வேலை செய்கிறேன். டைரக்டர் அந்தோணி கதை சொல்லும் போதே சுவாரஸ்யமாக இருந்தது. அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் செம ஜாலியாக இருந்தது. இந்த வருடத்தில் தமிழில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.
நடிகர் சமுத்திரகனி பேசும் பொழுது…இந்த நிறுவனத்தில் 18 வருடங்களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் சுஜாதா அவர்கள் நான் சின்னத்திரையில் இருக்கும் போதே என்னை வாழ்த்தி கொண்டே இருப்பார் . நான் பெரிய ஆளாக வருவேன் எனச் சொல்வார். சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரு தம்பி ஜெயம் ரவி. அவரது திறமைக்கு இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது. அவரோடு இன்னும் 100 படங்கள் நடிக்கலாம். இதில் பணியாற்றிய உழைப்பாளர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் இருக்கும் என்றார். ஜீவி பிரகாஷ் பேசியதாவது…அந்தோணி டார்லிங் படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம் அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும். ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள் வந்துள்ளது. கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீஸுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி. இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். இந்தப்படம் ரெண்டு ரோல் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள் என்றார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் ’சைரன் ‘ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.