டிக்கெட் பரிசோதகரானார் திருநங்கை ! தெற்கு ரயில்வே அசத்தல் !!
திண்டுக்கல் ரயில்நிலையத்தின் டிக்கெட் பரிசோதகர் பணியில் திருநங்கை சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிந்துவிடம் பேசிய பொழுது…
எனது சொந்த ஊர் நாகர்கோவில், நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல்லுக்கு மாறுதலாகினேன்.ரயில்வேயின் மின்சாரப் பிரிவில் பணிபுரிந்தேன்.
விபத்தில் கையில் காயம் ஏற்பட்டதால், மின்சாரப்பிரிவில் இருந்து, வணிகப்பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சிக்கு பின், பதவியேற்றுள்ளேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு.
திருநங்கையாக பிறந்ததற்காக சோர்வு அடையவில்லை. மனம் தளராமல் படித்ததால் சாதிக்க முடிந்தது. திருநங்கைகள் கல்வியால் உயரலாம் என்பதை நிரூபித்துள்ளேன். இதேபோல், பல திருநங்கைகள், அரசுப் பணிகளில் வரவேண் டும் என்பதே விருப்பம் என்றார் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.