தமிழக நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புலவன்பாடி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனி மலர்கொடி தம்பதியினர் மகள் தேவி இவர் கடந்த 2013ம் ஆண்டு புலவன்பாடி கிராமத்தில் உள்ள நிலத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தனது குழந்தையான தேவியை உடன் அழைத்து சென்றுள்ளார்.
மலர்கொடி விவசாய நிலத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த பொழுது சிறுமி தேவி அருகில் உள்ள அதே கிராம்தை சேர்ந்த சங்கர் என்பவரின் நிலத்தில் மூடபடாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். பின்னர் மாவட்ட வருவாய் துறை மற்றும் காவல்ந துறை பேரிடர் மீட்பு துறை ஆகியோர் நேரில் வந்து 2நாட்கள் போராடி சிறுமி தேவியை சடலமாக மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு கடந்த 11ஆண்டுகளாக ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா விவசாயி சங்கர் என்பவருக்கு 10ஆண்டு தண்டனையும் 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து களம்பூர் போலீசார் விவசாயி சங்கரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தமிழக வரலாற்றிலேயே ஆழ்துளை சம்மந்தபட்ட வழக்கில் முதன் முறையாக தண்டனையும் அபராதமும் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.