தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19ல் தாக்கல் செய்கிறார் !
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் வருகின்ற 12.2.2024ம்தேதி திங்கட்கிழமை. காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது.தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை. 2024ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி. திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவையில் நிதியமைச்சரால் வாசிக்கப்படும்.மேலும், 2024-2025 ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024ம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதி, செவ்வாய்க்கிழமை அன்றும், 2023-2024- ஆண்டின். கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும் இந்தக்கூட்டத்தொடர் முடிந்தபின் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் அதன்பின் மார்ச் முதல் வாரத்தில் ஒரு கூட்டத்தொடர் இருக்கும் என்றும் அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்தான் கூட்டத்தொடர் இருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.கடந்தமுறையை விட ஆளுநர் மீதான அதிருப்தி அதிகமாக இருப்பதால் இம்முறை அனைவரின் கவனத்தையும் பெறுகிறது.