தமிழக பட்ஜெட் கோடி கோடியாக நிதி ஒதுக்கீடு !!
2024-25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு, கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும் ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு, அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூபாய் 500கோடி ஒதுக்கீடு, தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு. 2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு,மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு.கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு.
2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு.முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம்.பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு. 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூபாய் 25,972 கோடி ஒதுக்கீடு. 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூபாய் 365 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூபாய் 3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும், நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும், மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநிர் விநியோகம் செய்யப்படும். ரூபாய் 1,517 கோடி மதிப்பீட்டில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், வடசென்னையை மேம்படுத்த ரூபாய் 1,946 கோடி ஒதுக்கீடு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூபாய் 13,720 கோடி ஒதுக்கீடு, மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் தொடங்க ரூபாய் 3,050 கோடி நிதி ஒதுக்கீடு, உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு, இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு, க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூபாய் 1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு. உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 8,212 கோடி நிதி ஒதுக்கீடு, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கட்டட கட்டமைப்பு பணிகளுக்கு ரூபாய் 700 கோடி நிதி ஒதுக்கீடு. கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்படும். 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூபாய் 2500 கோடி ஒதுக்கீடு. நான் முதல்வன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு. தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ரூபாய் 360 கோடி ஒதுக்கீடு. பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூபாய் 26 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூபாய் 843 கோடி ஒதுக்கீடு. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூபாய் ஒரு லட்சத்தில் இருந்து ரூபாய் 2 லட்சமாக உயர்த்தப்படும். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் ரூபாய் 120 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஆகியவற்றை தங்கம் தென்னரசு தன்னுடைய பட்ஜெட் உரையில் வாசித்தார்.