தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை இயக்குந‌ர் பாரதிராஜா வெளியிட்டார்…

0

திரையுலகில் செயலாற்றி வரும் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ் திரைப்படத்துறையின் நலனுக்காக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ் சினிமா வர்த்தக கையேடு எனும் தகவல் களஞ்சியத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல், பிற மொழி டப்பிங், வெளிநாட்டு மற்றும் இந்திய திரையரங்கு உரிமைகளை வாங்குவோர்களை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எளிதில் சென்றடையும் நோக்கில் இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டின் மூலம் தமிழ் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை எளிதாக பரப்புவதோடு, தயாரிப்பு செலவுகளை குறைக்க முடியும்.

வெளிப்புற யூனிட் செலவுகள், பல்வேறு நகரங்களில் வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு கிடைக்கும் மானியம், பிற மொழிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த கையேட்டில் இருப்பதால், தயாரிப்பு செலவைக் குறைக்க இது உதவுவதுடன். தயாரிப்பாளர்களின் விழிப்புணர்வுக்காக‌ தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வரவிருக்கும் படங்களின் வெளியீட்டு அட்டவணை, தொழில்துறை தகவல்கள், வெற்றிகரமான திரைப்படங்கள் குறித்த‌ ஆய்வுகள், பழம்பெரும் தயாரிப்பாளர்கள் குறித்த தற்போதைய தகவல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை தாங்கி இருக்கிறது.

logo right

மொத்தத்தில், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை விற்க சரியான ந‌பவர்களை அணுகவும், திரைப்படங்களின் பல்வேறு உரிமைகளை வாங்குபவர்கள் குறித்து தெரிந்துகொள்ளவும் இக்கையேடு உதவும். மாதாந்திர இதழாக அச்சிலும் டிஜிட்டல் வடிவத்திலும் தமிழ் சினிமா வர்த்தக கையேடு வெளியிடப்படும். திரைப்படங்களின் உரிமை குறித்த தகவல்களை தெரிவிக்க, ‘பொது அறிவிப்பு’ விளம்பரங்களை வெளியிடவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்கு விநியோகஸ்தர்கள், ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்குபவர்கள், பிற மொழி (தெலுங்கு) உரிமைகளை வாங்குபவர்கள், தென்னிந்திய‌ சாட்டிலைட் சேனல்கள், டிஜிட்டல் OTT தளங்கள், வெளிநாட்டு உரிமைகளை வாங்குபவர்கள், ஆடியோ/இசை நிறுவனங்களுக்கு தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டி அனுப்பப்படும். திரைப்பட வணிக சேவைகளை வழங்கும் ஸ்டூடியோக்கள், வெளிப்புற யூனிட்டுகள், டிஐ, வி எஃப் எக்ஸ், டி ஐ டி, க்யூப் டிஜிட்டல் சேவை, போஸ்ட்‍ புரொடக்ஷன் நிறுவனங்களுக்கும் பிரதிகள் அனுப்பப்படும்.

அதிகாரப்பூர்வ தொழில்துறை சங்கத்திலிருந்து வெளிவரும் பிராந்திய சினிமாவின் முதல் வர்த்தக வழிகாட்டியாக இது இருக்கும். சங்கதிற்கு சொந்தமான இந்தக் கையேடு எந்த தனி நபருக்கும் உரிமையானதல்ல. உறுப்பினரகளுக்கும் பல்வேறு உரிமைகளை வாங்குபவர்களுக்கும் இலவசமாக இது வழங்கப்படுகிறது.

தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டியை சங்கத்தின் தலைவர் ‘இயக்குந‌ர் இமயம்’ திரு பாரதிராஜா பல முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் முன்னிலையில் வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.