தருமபுரி டூ திண்டுக்கல் சென்ற அரிய வகை ரத்தம் தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுக்கள் !!
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக சிகிச்சையில் இருந்த செல்வி என்ற பெண்ணுக்கு ரத்தம் தேவை என மை தர்மபுரி அமைப்பு நிறுவனர் சதீஷ்குமாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து அவரது நண்பர் மணி பிரகாஷ் இருவரும் இணைந்து குருதி கொடையாளரை உடனடியாக தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாத நிலையில் தனியார் மாருதி ரத்த வங்கியில் இருந்து அரிய வங்கியான பாம்பே ஓ நெகட்டிவ் வகை ரத்தத்தை பெற்று உடனடியாக தருமபுரி வழியாக இயங்கும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஒரு யூனிட் ரத்தத்தை பாதுகாப்பாக ரயில்வே பணியாளர் உதவியுடன் அனுப்பினர்.
ரத்தம் காலை 6:00 மணிக்கு தொடர்புடைய நபர்களுக்கு கிடைத்து ரத்தம் ஏற்றப்பட்டு நலமுடன் உள்ளார். நள்ளிரவிலும் மனிதனேயத்தை காத்த காக்க உதவிய மை தருமபுரி அமைப்பிற்கும் ரயில்வே பணியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.