தருமபுரி : பொங்கலோ ! பொங்கல் !! செங்கலோ செங்கல்..

0

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வித்தியாசமான போட்டிகளை பொங்கல் பண்டிகையில் வித்தியாசமாக நடத்தி இளைஞர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சுமார் 50 இளைஞர்கள் பங்கு கொண்ட சிக்கன் சாப்பிடும் போட்டி வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினர் .

இந்த ஆண்டு புதுமையாக திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு செங்கல் கட்டி தொங்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் இரண்டு கைகளிலும் செங்கல்லை பிடித்தவாறு சுமார் இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்தனர் சிலரால் பிடிக்க முடியாமல் திணறினார்கள், கடைசியில் வெற்றி பெற்ற இளைஞருக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கினர்கள்.

logo right

பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு சாப்பாட்டு ராணி போட்டி நடத்தினர் இப்போட்டியில் 21 பெண்கள் கலந்துகொண்டு சுமார் மூன்று நிமிடத்தில் ஒரு சிக்கன் பிரியாணியை சுவைத்து சாப்பாட்டு சாப்பாட்டு ராணி பட்டத்தை வென்றனர். அதேபோல இரண்டு லிட்டர் குளிர்பானத்தை 8 இளைஞர்கள் ஒரு நிமிடம் 30 வினாடிகளில் குடித்து வெற்றி பெற்றனர். ஒரு கிலோ சிக்கனை நான்கு இளைஞர்கள் மூன்று நிமிடத்தில் சாப்பிட்டு வெற்றி பெற்றனர் தருமபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இளைஞர்களுக்கு பல்வேறு வகையில் புதிய புதிய விளையாட்டுப் போட்டிகளை ஊர் பொதுமக்கள் நடத்தினர்.

போட்டியை காண ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூடி நின்று ஆரவாரம் செய்து விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்தனர் அடுத்துவரும் ஆண்டுகளில் போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஜோடியாக வந்து விழாவை சிறப்பிக்கலாம் யாருக்கு தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.