தவிக்கும் தக்காளி விவசாயிகள்… உற்பத்தி ஆலை வேண்டும் !
பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நாட்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது./nபழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு ஒரு கிலோ தக்காளி ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது./nகிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்த விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழனி அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் ஒரு ஜாம் தயாரிக்கும் ஆலையை நிறுவினால் ஜம்மென மின்னும் தக்காளி விவசாயிகள் வாழ்கை !.