தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாத ஓ.பி.எஸ் !
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டுள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தான் பாஜக கூட் டணியில் இருப்பதாக கூறி வரும் பன்னீர்செல்வம், ‘இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம்’ என்கிறார். ஆனால், சட்டப்பூர்வமாக இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த, பழனிசாமிக்கு மட்டுமே உரிமை எனவே பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘தமிழகத்தில் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆதரவாளர்கள் ஏ.சி சண்முகம் ஜான்பாண்டியன் பாரிவேந்தர் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாவிட்டது.அதை பன்னீர்செல்வமே பல இடங்களில் உறுதி செய்திருக்கிறார். அதே நேரம் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு 2 மாதங்கள் போதுமா என்று கேட்டால், அவர்களிடம் பதில்லை. பாஜகவின் தாமரை சின்னத்திலோ, தினகரனின் குக்கர் சின்னத்திலோ நிற்கும் எண்ணம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் ஓ.பி.எஸ் மகன் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகவே மாறிவிட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் ..! தாமரை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது ஏ.சி.எஸ் தாமரை சின்னத்தில் நிற்பதை உறுதி படுத்திவிட்டார், ஆகவே மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.