திகைக்க வைத்த திருவிடை மருதூர் சிறுவனின் உற்சாகம்…
இந்த புகைப்படம் திருவிடைமருதூரில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் பொழுது நேற்று எடுக்கப்பட்டது. அண்ணாமலையை சிரம் உயர்த்தி உள்ளார்ந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறான்.
இந்த சிறுவனை அண்ணாமலை பார்த்து கை அசைத்தாரா ?என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்த முகபாவங்கள், அகமகிழ்வுகள், உணர்வுகள் அனைத்தும் அண்ணாமலையிடம் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியபடி உள்ளது என்பதை மட்டும் நம்மால் உணரமுடிகிறது. அண்ணாமலையை அரசியலுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான, நேர்மையான பன்முக ஆற்றலுடைய எழுச்சிமிகு தலைவராக வளரும் தலைமுறையினர் கருதுகின்றனர் என்பதே நிதர்சனம்.
இனி தமிழகத்தில் பிராமணன், வடக்கு தெற்கு, ஆரியன் திராவிடன், ஆத்திகம் நாத்திகம், நீட்டு பூட்டு, பரம்பரை குடும்ப அரசியல் போன்ற அனைத்து தீய சக்திகளும் துடைத்து எறியப்பட்டு புதிய ஜனநாயக அரசியலுக்கு தமிழகம் மாறும் காலம் இது என்பதையே காட்டுகிறது.