திண்டுக்கல் : அமைச்சரானார் ஐ.பி. செந்தில்குமார் !
திண்டுக்கல் மாவட்டதிற்கு உட்பட்ட பொன்னகரம் பகுதியில் நேற்று பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கும் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய அந்த பேனரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் ப ஐ பி செந்தில்குமார் உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் என பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் பெயர் பதிவிடப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு மற்றும் குழப்பம் நிலவியது. மேலும் பேனரில் ரெண்டலை பாறைக்கு பதிலாக இரண்டலைப்பாறை என எழுத்துப்பிழைகளும் இருந்தன. தனியார் பள்ளி அருகே விழா ஏற்பாடு செய்ததாலும், தேர்வு காலம் என்பதாலும் மைக் செட்டினால் மாணவர்களுக்கு கல்வி பயில தொந்தரவாக இருந்ததாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என புலம்பிக் கொண்டு சென்றனர்.
ஆனால் நிகழ்சிக்கு வந்த செய்தியாளர்களோ அரசு துறை அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ் மீது என்ன கோபமோ, பள்ளி வளாகம் மற்றும் பேனர் ஆகியவற்றை கவனிக்காமல் விழா ஏற்பாடு செய்தது விழாவிற்கு வந்த அனைவரையும் முகம் சுழிக்க செய்து விட்டார்கள் என விழா முடிந்தபின் கிளம்பி சென்றனர்.