திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (அ) நாளை மறுநாள் வெளியிடப்படும் – அமைச்சர் துரைமுருகன்…

0

கூட்டுறவுத்துறை சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் வழங்கும் நிலையத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்…

தமிழகத்தில் சில தனியார் பெட்ரோல் நிலையங்கள் நேர்மையில்லாத வகையில் செயல்படுகிறது. பெட்ரோல் தரத்துடன் இல்லாமல் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் கூட்டுறவு பெட்ரோல் நிலையங்கள் மக்களுக்கு தரத்துடன் நியாயமான முறையில் பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாக கூறினார்.

logo right

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் காவிரியில் எப்பொழுதாவது கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார்களா ?

ஒருபோதும் அவர்கள் கூற மாட்டார்கள். தற்பொழுதும் அப்படிதான் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று தான் தண்ணீரைப் பெற்று வருகிறது என்றவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக அன்றைக்குள்ள பாராளுமன்றத்தில் எதிராக வாக்களித்து இருந்தால், இன்று அந்த சட்டம் நிறைவேறி இருக்காது என்றார்

திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வர இருப்பதால் அதனை வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.