திருக்குவளையார் தாலி எடுத்து கொடுத்த கவுன்சிலர் தீ குளிக்க முயற்சி !
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசரம் மற்றும் சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா, முன்னிலையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டத்தில் திமுகவைச்சேர்ந்த 60 வது வார்டு கவுன்சிலர் காஜாமலை விஜய் ஒரு வருடமாக தான் வைக்கும் கோரிக்கைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மேயரை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேயர் மற்றும் ஆணையரிடம் கடிதம் அளித்ததால் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் மாமன்ற கூட்டத்தை விட்டு வெளியேறிய கவுன்சிலர் விஜய் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் வாயில் முன்பு தண்ணீர் ஊற்றி தரையை சுத்தம் செய்தனர். முன்னதாக அவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்றதை தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் (மெகா டிவி ஜீடு) வீடியோ எடுத்தபொழுது கவுன்சிலர் விஜய் ஓட்டுனர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.தற்பொழுது பத்திரிகையாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் மேயரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினரோ கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.