திருச்சியில் அப்ரண்டீஸ் முடித்தோர் அப்செட் குடும்பத்துடன் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு !

0

தமிழகத்தில் பயிற்சி முடித்த ரயில்வே துறையில் ஆக்ட் அப்ரண்டீஸ் 25 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு பணி நியமன வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு இணையான காலகட்டத்தில் பயிற்சி முடித்த வட இந்திய இளைஞர்களுக்கு 2020 ஆண்டு வரை வேலை வழங்கப்பட்டுள்ளது.

logo right

தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களை புறக்கணித்தார்கள். தமிழ்நாடு முழுவதும் 17,000 பேர் வேலை வாய்ப்பு வழங்காமல் தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் ரயில்வே நிர்வாகம் எங்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த நாங்கள் எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உங்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறோம். நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு மனு அளித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உள்ளிட்டோர்க்கு மனு அனுப்பி உள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அதற்கு வந்த பயிற்சி முடித்த ரயில்வே துறை அப்ரண்டீஸ் திருச்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளதாகவும் எங்கள் குடும்பத்தினருடன் இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் மனு அளிக்க வந்து திருப்பி ஒப்படைத்து விடுவதாக குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.