திருச்சியை வானத்தில் இருந்து வட்டமடித்து காண வாய்ப்பு…
திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி இப்பகுதியை வானில் இருந்து சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம்(எல்.சி.ஏ. என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி சமயபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இருந்து கிளம்பும் ஹெலிகாப்டர் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில்ஆகிய காவிரி கொள்ளிடம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச், நர்தர்ஷா பள்ளிவாசல் மற்றும் திருச்சியில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் ஆகியவற்றை கழுகுப் பார்வையும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்கள் திருச்சியில் இது முதன்முறை என சிலாகிக்கிறார்கள் ஜனவரி 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள், ஒரு நபருக்கு ரூபாய் 5,999 கட்டணமாக நிர்ணயித்து இருக்கிறார்கள் . குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஃபாலோயராக இருப்பவர்களுக்கு தள்ளுபடியாக 1000 தருகிறார்கள். கோவில்கள் தோப்புகள் கொள்ளிடம் காவிரி முக்கிய நிறுவனங்கள் மீது இந்த ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடும் புகைப்படங்களும் நீங்கள் எடுக்கலாம் இனி ஒருமுறை இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் வாய்பை பயன்படுத்திக்கொள்பவர்கள் தானே புத்திசாலி ! என்ன ஒரு டிரிப் போய் வரலாமா.
எல்லாம் சரி யாரை எந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் அதுதானே உங்கள் கேள்வி 8508098648 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் தட்ஸ் ஆல்..