திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக வே.சரவணன் இ.ஆ.ப. பொறுப்பேற்றார் !
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன்,இ.ஆ.ப., பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டிருந்ததது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் தெரிவித்துள்ளார்.