திருச்சி : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் விலை உயர்வு !
தமிழகத்தில் ஆவின் பால் மிகப்பிரபலம் பச்சை நிற பால் பாக்கெட் ஒரு லிட்டர் கார்டு மூலம் வாங்குவது 42 ரூபாயும் ரொக்கமாக 43ரூபாயும் கொழுப்புச்சத்து 4.5 சதவிகிதமும் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள டிலைட் பாலின் விலை ஒரு லிட்டர் கார்டு ரூபாய் 43 ஆகவும் ரொக்கம் ரூபாய் 44 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கொழுப்பு சத்து மூன்று புள்ளி ஐந்து சதவீதமாக உள்ளது.
இதிலிருந்து வேறு எந்த பொருளும் பிரித்து எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மீண்டும் பச்சை நிற பால் பாக்கெட் வழங்க மாவட்ட ஆட்சியரகத்தில் ஆவின் முகவர்கள் சங்கம் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மனு அளித்துள்ளனர்.